தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
unknown nodeஇதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இன்று உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் விஜய், செல்வராகவன் கதாபாத்திரத்தையும் பாராட்டி வருகிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில், இயக்குனர் செல்வராகவனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாக என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த செல்வராகவன் ” முன்னாடி நடந்திருக்கு.. விஜய் சாரை வைத்து வாய்ப்பு வந்திருக்கு ஆனால் கால்ஷீட் காரணமாக நடக்க வில்லை” என்று கூறியுள்ளார்.
unknown nodeஅடுத்தாக நீங்கள் விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளதா.? என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த செல்வராகவன் ” கண்ணாடிப்பாக நடக்கலாம் அதற்கான சரியான கதை மற்றும் கால்ஷீட் அமைந்துவிட்டால் கண்டிப்பாக பண்ணலாம்” என தெரிவித்துள்ளார்.