மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. ஐரா விருது(INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS)என்கிற 2018 -ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 – ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றிருந்தார்.
இதன் பின் ஐரா விருது(INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS)– க்கு தேர்வாகியுள்ள 4 நபர்களின் பெயரை ஐஏஆர்எ வெளியிட்டது. அதில்விஜய், பெயர் இடம்பெற்றது.
இந்நிலையில் மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
https://twitter.com/IARA_Awards/status/1043651323026124800