சென்னை :தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால், திரை துறையினர் பலரும், அரசியல் தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து , துணை முதல்வர் உதயநிதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு கலைஞர் கருணாநிதி – உதயநிதி இடையிலான ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து பதிவிட்ட பதிவில், “ஒருநாள் கலைஞரும் நானும் கோபாலபுரத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போது உதயநிதி, தன் மனைவி கிருத்திகாவோடு வந்திருந்தார். நின்றுகொண்டே பேசினார். கலைஞர் மறுத்த ஒருகருத்தை தன் வாதத்தை முன்னிறுத்திச் சாதித்துச் சென்றார் உதயநிதி. அப்போதே தெரிந்துகொண்டேன், உதயநிதி வலிவும் தெளிவும் மிக்க வல்லவர் என்று.
உதயநிதி பேரீச்சம் பழம்போல் மென்மையானவர். ஆனால், அதன் விதையைப்போல் உறுதியானவர். சின்னச் சின்ன எதிர்ப்புகள் இவரைச் சிதைப்பதில்லை. குன்றிமணி முட்டிக் குன்றுகள் சாய்வதில்லை. காலம் இவரை மேலும் மேலும் செதுக்கும். ‘தம்பீ வா தலைமையேற்க வா’ அண்ணாவிடம் கடன்வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன் ” என உதயநிதிக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள்
கலைஞரும் நானும்
கோபாலபுரத்தில்
உரையாடிக்கொண்டிருந்தோம்உதயநிதி தன் மனைவி
கிருத்திகாவோடு வந்தார்;
நின்றுகொண்டே பேசினார்கலைஞர் மறுத்த ஒருகருத்தை
தன் வாதத்தை முன்னிறுத்திச்
சாதித்துச் சென்றார்அப்போதே
தெரிந்துகொண்டேன்
வலிவும் தெளிவும் மிக்க
வல்லவர் இவரென்றுஉதயநிதி… pic.twitter.com/3GzLaRR4R4
— வைரமுத்து (@Vairamuthu) November 27, 2024
