சுட்டெரிக்கும் வெயில்...பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்.!

Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Aadujeevitham

Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில், மார்ச் 28-ல் இப்படம் வெளியாகிறது.

READ MORE –நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா!

2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் பிருத்விராஜ் கேரளாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளியாக, சவுதி அரேபியாவில் ஒரு ஆட்டு பண்ணையில் அடிமையாக நடிக்கிறார்.

READ MORE –11 நாள் தூங்காமல் வேலை! அந்த படத்திற்காக விஜயகாந்த் பட்ட கஷ்டம்?

அதன்படி, தற்பொழுது வெளியாகியுள்ள ட்ரைலரில் ‘நடிகர் பிரித்விராஜ் ஆடு வளர்ப்பராக காட்டப்படுகிறார். பாலை வனத்தில் சிக்கிக்கொள்ளும் அவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டு, கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்போது, அழுகிப்போன தலைமுடியையும் தாடியையும், முகத்தையும் கவலையுடன் பார்ப்பதையும் கட்சியாக எடுத்துரைக்கிறது.

unknown node

READ MORE –திகிலை கிளப்பும் ‘ஷைத்தான்’….முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

மேலும், அங்கு அவர் எதிர்கொள்ளும் கடுமையான வெப்பம், விஷ பாம்புகள் மற்றும் மணல் புயல்கள் உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை தைரியமாக கையாளும் சவால்களை பற்றி விவரிக்கிறது. இதனிடையே அவரது காதலி காட்சிகளும் நினைவு செய்வதாக தெரிகிறது, மொத்தத்தில் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் பிரித்விராஜுடன் அமலா பால், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், கே ஆர் கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக்காபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயில்...பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்.!