இது என்னுடைய முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது! பிரபல இந்தி நடிகர் அதிரடி!

நடிகர் ராணா தமிழில், ஆரம்பம், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும்

நடிகர் ராணா தமிழில், ஆரம்பம், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நிஜ வாழ்க்கை போரடித்ததால் தான், நான் நடிப்பை தேர்ந்தெடுத்தேன். நிஜத்தில் செய்ய முடியாததை சினிமாவில் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை. எனக்கு சிக்கலான கேரக்டரில் நடிக்கிறது ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நானாக எதையும் பிக்ஸ் பண்ணுவதில்லை. அதை அதன் போக்கிலேயே விட்டுவிடுவேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வில தான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது.’ எனக் கூறியுள்ளார்.