சென்னை :அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது மாஸ்ஸான வில்லன் கதாபாத்திரம் கொண்ட படம் தான் என கூறி வந்தனர். அஜித் மங்காத்தாவுக்கு பிறகு அப்படியான படங்களில் நடிக்கவில்லை என்கிற காரணத்தால் அப்படியான ஒரு லுக்கில் ஒரு படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
அப்படி எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தப்போது தான் அஜித் அவருடைய தீவிரமான ரசிகரும், இயக்குனருமான ஆதிக் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆனார். படத்தில் நடிக்கும்போது அவருடைய லுக் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படமும் தற்போது மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனது சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
படத்தை பார்த்த கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” குட் பேட் அக்லி படம் மிகவும் அருமையாக இருக்கிறது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
unknown nodeமற்றொருவர் ” குட் பேட் அக்லி திரைப்படம் வேற மாதிரி இருக்கிறது. ஆதிக் அஜித் ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார். ஏ.கே. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு உண்மையான ரசிகனின் செதுக்கல். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ரசிகர்களுக்கு பிடித்ததை போல வைத்திருக்கிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node