சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. படம் வெளியான முதல் ஒரு வாரத்தில் ரசிகர்கள் கொண்டாடினாலும் அதற்கு அடுத்த வாரத்தில் கொஞ்சம் வரவேற்பு குறைந்தது. படம் குடும்ப ரசிகர்களை கவரும் அளவுக்கு இல்லாமல் ரசிகர்களுக்காகவும், இளைஞர்கள் கொண்டாடக்கூடிய வகையில் இருப்பதாலும் குறிப்பிட்டவர்கள் மட்டும் […]
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களுக்குள், இந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே […]
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு முன்னதாக அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் மனம் வாடிவிட்டனர். வசூல் ரீதியாகவும் விடாமுயற்சி படம் 200 கோடி கூட வசூல் செய்யாமல் தோல்வியை […]
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே இருக்கும். அப்படி தான் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி வெளியான முதல் நாளில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாக கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. இதனையடுத்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்கிற காரணத்தால் […]
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் படங்கள் என்றாலே முதல் நாளில் அதிகமாக வசூல் செய்துவிடும். எனவே, குட் பேட் அக்லி படம் அவருடைய கேரியரில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள காரணத்தால் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்த கணிப்பின்படி படம் எவ்வளவு […]
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது மாஸ்ஸான வில்லன் கதாபாத்திரம் கொண்ட படம் தான் என கூறி வந்தனர். அஜித் மங்காத்தாவுக்கு பிறகு அப்படியான படங்களில் நடிக்கவில்லை என்கிற காரணத்தால் அப்படியான […]
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு மங்காத்தா பாணியில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு ஃபேன் பாய் திரைப்படமாக இயக்குனர் ஆதிக் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் டீசர், ட்ரைலருமே பழைய வின்டேஜ் […]
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு, கார் ரேஸ் என இரண்டிலும் பயணித்து வரும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில், சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுக்கிறது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு டீசரில் பழைய அஜித்தை பார்க்க முடிந்த்து, மாஸ் டயலாக், ஆக்ஷன், நடை , உடை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போடா […]
சென்னை : ஒரு பக்கம் இசையமைப்பாளராகவும் மற்றொரு பக்கம் நடிகராகவும் கலக்கி கொண்டு இருப்பவர் ஜிவி பிரகாஷ். இதுவரை லோக்கலான மற்றும் ஜாலியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜிவி இந்த முறை வித்தியாசமாக இதுவரை கையில் எடுக்காத அதிரடியான கதாபாத்திரத்தை எடுத்து கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள், இதற்கு முன்னர் வெளியான சில வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நீண்ட வருடங்கள் கழித்து தங்கள் ஆஸ்தான நாயகனை மங்காத்தா போல கொண்டாட்டம் நிறைந்த படமாக இருக்கும் என அஜித் […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK25’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக “பராசக்தி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் தலைப்பை அறிவிக்கும் வகையில், டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டைட்டில் டீசரை வைத்து பார்க்கும் பொழுது, ஸ்ரீலீலாவும் அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மறுபுறம், சிவகார்த்திகேயனின் பயங்கரமான எதிரியாக ரவி மோகன் நடிப்பதாக தெரிகிறது. மேலும், டீசர் பழைய […]
சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் ‘SK 25′ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அறிவிக்கும் வகையில் படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், புரட்சி யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. நாளையே புரட்சியை தொடங்குவோம். என்று சிவகார்த்திகேயன் தீ பாட்டிலை கொளுத்தும் படி, ப்ரீ-லுக்கை வெளிட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் […]
சென்னை : நேற்று முன்தினம் (அக்-31) தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயனின் எப்போதும் அல்லாத மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அனைவரிடமும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதிலும், இந்த படத்தில் எந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு பலம் கொடுத்ததோ அதே அளவிற்கு இப்படத்தின் இசை முக்கிய பலமாக அமைந்துள்ளது. ராணுவ படத்தில் எந்த ஒரு மாஸ் பிஜிஎமும் […]
சென்னை : தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் பாடலான “கோல்டன் ஸ்பரோ” வெளியானது. தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தின் முதல் பாடல் ‘Golden Sparrow’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தபடி, பாடலும் அமர்க்களமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில், அறிவு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தனுஷ், ஜி.வி., அறிவு, சுப்லாஷினி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலில் நடிகர் பிரியங்கா மோகன் […]
வாணி போஜன் : சின்னத்திரையில் சீரியல்களில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை வாணிபோஜன். இவர் இப்போது பல படங்களில் நடித்துக்கொண்டு இன்னும் சில படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தற்போது வாணி போஜன் ஆர்யன் , கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாணிபோஜன் தான் நடிக்க மறுத்த படங்கள் […]
ஜி.வி.பிரகாஷ்: சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல, இப்படத்தின் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரைலரில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பேசப்பட்டது. அதே போல படத்திலும் பின்னணி இசை நன்றாக இருக்கும் என […]
Kalvan Trailer: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முன்னதாக, படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரைலரும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும்பொழுது, குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை, விரட்டுவதே படத்தின் கதை. ஜிவியின் வழக்கமான படத்தை காட்டிலும், இந்த படம் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டுதால் படம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் பிவி ஷங்கர் இயக்கியுள்ள […]
நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது, படத்தின் […]
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் “ஐங்கரன்”. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் […]
ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். இந்த படத்தை காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் அவர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. ஆனால் பொருளாதார சிக்கல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக இப்படத்துக்கான ரிலீஸ் […]