விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

விடுதலை 2 திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனத்தை கூறியுள்ளார்.

dhanush about viduthalai 2

சென்னை :விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அழுத்தமான அரசியல் வசனங்களை வைத்து தரமான படத்தை கொடுத்திருக்கிறார். எனவே, மக்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், வடசென்னை, ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களில் நடித்த தனுஷ் தற்போது படத்தினை பார்த்துவிட்டு தன்னுடைய மாஸ்டர் இயக்குனர் வெற்றிமாறனை மனம் திறந்து பாராட்டியுள்ளார். படம் பார்த்துவிட்டு படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பும் அருமையாக இருப்பதாக விமர்சனத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” விடுதலை 2 படம் தொடங்கியதில் இருந்து கடைசி வரை அனைத்து காட்சிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறனின் சிறப்பான படைப்புகளில் இதுவும் ஒன்று. படத்தில் இளையராஜா சாரின் ஸ்கோர் எனக்கு  மிகவும் பிடித்திருந்தது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் முக்கியமாக நான் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பிரமாதம். மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காகப் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நான் இந்த நேரத்தில் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” எனவும் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷும் வெற்றிமாறனும் இணைந்த படங்கள் இன்று வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களாக இருந்து வருகிறது எனவே. இவர்களுடைய கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

unknown node