இப்போது அது வேண்டாம்! கணவருக்கு கண்டிஷன் போட்ட ரகுல் ப்ரீத் சிங்?

rakul preet singh sad

Rakul Preet Singh சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பொதுவாக திருமணம் செய்துவிட்டாலும் பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வருவதால் சில வருடங்களுக்கு பிறகு தான் குழந்தை பெற்றுக்கொள்வது உண்டு. அதுவரை திருமணம் செய்து முடித்த பின் தொடர்ச்சியாக படங்களில் மட்டுமே நடித்து வருவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும் தான் திருமணம் செய்துவிட்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகு படங்களில் நடித்து வருகிறார்கள்.

READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது தேனிலவை தள்ளி வைத்துள்ளாராம். கடந்த பிப்ரவரி 21 மதியம் கோவாவில்  ஜாக்கி பக்னானியை  ரகுல் ப்ரீத் சிங்  திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். திருமணம் முடிந்த புகைப்படங்களும் வைரலானது. 

READ MORE – ஆள விடுங்கப்பா சாமி! கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்?

திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் தேனிலவை தள்ளி வைத்து கொள்ளலாம் என்று கணவருக்கு கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கோவாவில் திருமணம் செய்து கொண்ட பிறகு   ரகுல் ப்ரீத் சிங் மற்றும்  ஜாக்கி பக்னானி இருவரும் மும்பைக்கு திரும்பினார்கள்.

READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!

ரகுல் ப்ரீத் சிங் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதால் அவருக்கு பட ஷூட்டிங் பாக்கி இருப்பதால் உடனடியாக படப்பிடிப்புக்கு செல்லவேண்டும் என்பதால் ஷூட்டிங்கிற்கு சென்றார். எனவே பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவர் பிசியாக இருப்பதால் இப்போது தேனிலவு வேண்டாம் மே மாதம் வைத்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு எடுத்துள்ளார்கள்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்