சென்னை :நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை இயக்குநர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அப்டேட்களை KVN தயாரிப்பு நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது.
தற்பொழுது, படத்தில் நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மலையாள நடிகையான மமிதா, ‘பிரேமலு’ படத்தின் மூலம் தென்னிந்தியாவின் சென்சேஷன் நடிகையாக மாறினார்.
unknown nodeமுன்னதாக, பாலிவுட் நடிகர் பாபி தியோல், ‘தளபதி 69’ படத்தில் இணைந்துள்ளதாக நேற்று அறிவித்தது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் இணைந்துள்ளதாக இன்று காலை அறிவித்துள்ளது.
முன்னதாக, ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் இருவரும் மீண்டும் திரையில் ஒன்றாக வருவதைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பூஜா ஹெக்டே படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும், பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இவர்களது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
