சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK 25′ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு.!

சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி. வி.பிரகாஷ் இசையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK 25'படத்தின் தலைப்பு நாளை (29-01-2015) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.

SK25 Title Teaser

சென்னை :இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் ‘SK 25′ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அறிவிக்கும் வகையில் படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், புரட்சி யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. நாளையே புரட்சியை தொடங்குவோம். என்று சிவகார்த்திகேயன் தீ பாட்டிலை கொளுத்தும் படி, ப்ரீ-லுக்கை வெளிட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார்.

unknown node

மேலும், அந்த போஸ்டரில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க, ஜெயம் ரவி, அதர்வா முரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவியுடன் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது இப்படம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.