சிறகடிக்க ஆசை சீரியல்.. தன் அம்மாவை வெறுக்கும் க்ரிஷ்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 10] எபிசோடில் க்ரிஷை  அடிக்க கை ஓங்கும் ரோகினி.. முத்துவிடம் மாட்டிக்கொள்ள போகும் தருணம்..

Rohini (16) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 10] எபிசோடில் க்ரிஷை  அடிக்க கை ஓங்கும் ரோகினி.. முத்துவிடம் மாட்டிக்கொள்ள போகும் தருணம்..

ஒரே ஸ்கூலில் அண்ணாமலை ,ரோகிணி ;

ரோகினி க்ரிஷ  ஸ்கூலுக்கு  கூப்ட்டு கிளம்புறாங்க . ரோகிணிகிட்ட க்ரிஷ்  அம்மா இன்னைக்கு என்னோட பிரண்டுக்கு பர்த்டே..   ஸ்கூல் முடுஞ்சு வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறான் அப்படின்னு சொல்ல அதுக்கு ரோகிணி சொல்றாங்க அதெல்லாம் போகக்கூடாது நம்ம வீட்ட பத்தி யாருக்குமே தெரியக்கூடாது.. என்னை பத்தியும் நீ யாருகிட்டயும் சொல்லக்கூடாது அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு ப்ளீஸ்மா ப்ளீஸ்மானு க்ரிஷ் கெஞ்சுறான் ஆனாலும் ரோகிணி நான் சொல்றதை நீ கேளு கிரீஸ் அப்படின்னு மிரட்டுறாங்க. உடனே கிரிஷ்  கோபப்பட்டு அமைதியாயிடுறான்..  சமாதானப்படுத்த ரோகினி கேக் வாங்கி தரேன்  அப்படின்னு சொல்றாங்க. இந்த பக்கம் அதே ஸ்கூலுக்கு அண்ணாமலை வர்ராரு.. முத்து தான் டிரா பண்ண வராரு.. க்ரிஷ் முத்துவை பார்த்ததும் முத்து அங்கிள் அப்படின்னு கூப்பிட போறான் உடனே ரோகிணி வாய் பொத்திகிட்டு கொஞ்சம் அமைதியா இரு அப்படின்னு அடிக்க கை தூக்குறாங்க .

இப்போ முத்து போனதும் அங்க இருக்குற செக்யூரிட்டி கிட்ட அண்ணாமலை பத்தி  விசாரிக்கிறாங்க.  புதன்கிழமை மட்டும் வருவார்னு சொல்லுறாங்க , உடனே ரோகிணி அங்கிருந்து கிளம்பி மறுபடியும் வீட்டுக்கே போயிடறாங்க.. ரோகிணி ஓட அம்மா என்னாச்சு இப்பதானே போன மறுபடியும் கிரிஷ கூப்பிட்டு வர அப்படின்னு கேட்க க்ரிஷ் போயி கோவத்துல கதவு அடச்சுக்குறான்..  ரோகினி சொல்றாங்க இனிமே புதன்கிழமை புதன்கிழமை லீவ் போட்டுரு  எல்லாம் என் நேரம் எனக்கு மட்டும் பிரச்சனை தேடி வருதுன்னு சொல்லி புலம்பிட்டு இருக்காங்க . என்னாச்சு கல்யாணி  அவங்க அம்மா கேட்க மனோஜோட அப்பா அதே ஸ்கூலுக்கு தான் வேலைக்கு வந்து இருக்காங்க ஆனா புதன்கிழமை  மட்டுமே வருவாராம் அன்னைக்கு மட்டும் ஸ்கூல் லீவ் போட்டுக்கலாம்னு சொல்றாங்க.

manoj (13) (1)

புது வீடு வாங்கும் மனோஜ் ரோகிணி..

இதனால அவன்  படிப்பு என்னாகுறது .. ஏதாவது ஒரு வழி பண்ணலாம் அப்படின்னா ரோகினி சொல்ல பேசாம நீ உண்மைய சொல்லிருடி  அவங்க புரிஞ்சுபாங்க அப்படின்னு சொல்றாங்க .எப்ப சொல்லணும்னு எனக்கு தெரியும் நீ கொஞ்சம் அமைதியா இருமா அப்படின்னு சொல்லிடறாங்க ரோகிணி . இப்ப மனோஜ் கால் பண்ணி பீச் ஹவுஸ்  பார்க்க வர சொல்றாங்க ரோகினியும் கிளம்பி போறாங்க அந்த ஹவுஸ் ஓனர் ,பார்க் பிரண்ட்  கிட்ட மனோஜ் பத்தி ரொம்ப புகழ்றாரு.. இப்போ ரோகிணி வந்துடறாங்க வீட்டை பார்த்துட்டு என்ன மனோஜ் இவ்வளவு பெரிய வீடா இருக்கு. ஆனா ரொம்ப அழகா இருக்குன்னு சொல்றாங்க.

ரெண்டு பேருமே மாடியில் போய் நின்னு கடலை   ரசிச்சிட்டு இருக்காங்க இதோட  இன்னைக்கு  எபிசோட முடிச்சு இருக்காங்க.. நாளைக்கு  ப்ரோமோல   மீனா டெக்கரேசன் ஆர்டர் வந்த பணத்தை நான் உண்டியல்ல போட போறேன்னு சந்தோஷமா சொல்லிட்டு இருக்காங்க ..ஆனா முத்து மட்டும் ஏதோ கோவமா உக்காந்துட்டு இருக்காரு.. அதை மீனா கவனிக்கவே இல்ல..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்