ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் செகண்ட் சிங்கிள்.!

இசையமைப்பாளார் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது.

GoodBadUgly Second Single

சென்னை :இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடல் “OG சம்பவம்” ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்பொது இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்கள் தற்போது சினிமா வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் செகண்ட் சிங்கிளான “காட் பிளஸ் யூ” பாடல் ப்ரோமோவை தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை 5:50 மணிக்கு வெளியிட்டது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

முதல் பாடலான “OG சம்பவம்” பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியிருந்தனர். இப்போது இரண்டாவது பாடலுக்கு சற்று வித்தியாசமான காம்போவாக ஜிவி பிரகாஷ் இசையில் அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல் நாளை (மார்ச் 30) வெளியாகிறது. இந்த ‘காட் பிளஸ் யூ’ பாடலுக்கு ரோகேஷ் வரிகள் எழுத், பால்டப்பா ராப் செய்துள்ளார்.

unknown node