புதிய படத்திற்காக புதிய கார் வாங்கிய படக்குழு!

இயக்குனர் பத்ரி வெங்கடேசன் இயக்கத்தில் இருக்கும் புதியப்படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்திற்கு பின் இந்த புதிய படத்தில் ரியோராஜ் நடிக்கிறார்.

இயக்குனர் பத்ரி வெங்கடேசன் இயக்கத்தில் இருக்கும் புதியப்படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்திற்கு பின் இந்த புதிய படத்தில் ரியோராஜ் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.இப்படம் குறித்து பேசிய ரம்யா, காதலர்கள் பயணம் செய்யும்போது சந்திக்கும் புதிய மனிதர்கள், அனுபவங்கள் ஆகியன பற்றிய கதை என்றும், இதற்காக படக்குழு புதியகாரை வாங்கியுள்ளதாகவும், ஒரு கதாபாத்திரமாகவே காரும் படம் முழுவதும் பயணிக்கும் என்றும், படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.