பிங்க் ரீமேக் படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “நேர் கொண்ட பார்வை” என டைட்டில் வைத்து உள்ளனர்.
இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் பிங்க் ரீமேக் படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளராக போனி கபூர் இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர்.
அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தும், டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத்தும், கிரித்தி ஹில்ஹாரி கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாச்சலமும் நடிக்கின்றனர்.மேலும் ஆன்ட்ரியா தரங் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவுள்ளார்.
படத்தில் அஜித்துக்கு மனைவியாக தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைக்கின்றார்.அஜித்தின் பிறந்தநாளன்று படம் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என தல ரசிகர்கள் ஆவர்வமாக இருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு “நேர் கொண்ட பார்வை” என டைட்டில் வைத்து உள்ளனர்.