தளபதி 65 : மூன்றாவது முறையாக தளபதியுடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்.!

It has been reported that Anirudh will be composing music for Thalapathy Vijay's next Thalapathy-65 for the third time.

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .

ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா ,மகிழ் திருமேனி, பேரரசு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டிருந்தது‌.

மேலும் தளபதி விஜய்யின் 65-வது படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் , வில்லனாக பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தளபதி விஜய்யின் கத்தி மற்றும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.