நடிகர் சூர்யாவும் கார்த்தியும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அகரம் பவுண்டேசன் மூலம் பல மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வருகின்றனர். இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றனர்.
unknown nodeதற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
unknown nodeஇவர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை சூர்யாவும் கார்த்தியும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இந்த நிதியுதவி ரசிகர்களை தாண்டி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.