ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் "Kissik" பாடல்!

’புஷ்பா-2’ திரைப்படத்தின் Kissik பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Sreeleela Kissik

சென்னை :புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த “ஓ சொல்றியா மாமா” பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின் ப்ரமோஷனுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த பாடலில் சமந்தாவின் கவர்ச்சி மற்றும் அவர் ஆடிய நடனம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். முத்த பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாவது பாகத்தில் ஒரு கவர்ச்சி பாடல் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், உண்மையில் அப்படி ஒரு பாடல் இருப்பதாகவும், அந்த பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடவுள்ளதாகவும் படக்குழு அவர் கவர்ச்சியாக நிற்கும் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஸ்ரீ லீலாKurchi Madathapettiஎன்ற பாடலில் நடனமாடி யாருங்க இந்த பொண்ணு இப்படி நடனம் ஆடுறாங்க? என அசத்தலாக நடனம் ஆடி வியக்க வைத்து இருந்தார். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டான காரணத்தால் தற்போது அவருக்கு புஷ்பா 2 படத்திலும் Kissik என்ற பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடனம் ஆடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடனத்தில் அவர் எந்த அளவுக்குத் திறமையானவர் என்பதை அந்த பாடலிலே காட்டியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த “ஓ சொல்றியா மாமா” பாடல் அளவுக்கு நடனம் ஆடி ரசிகர்களைக் கவருவாரா? என்பதைப் பாடல் வெளியான பிறகு தான் தெரியும். இருப்பினும், இந்த அறிவிப்பைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஓ சொல்றியா மாமாவை ஓவர்டேக் செய்யப்போகும் ஸ்ரீ லீலா என தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் இந்த Kissik பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் எப்போது இந்த பாடல் ரிலீஸ் செய்யப்படும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புஷ்பா 2 படம் டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.