காப்பானை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் ரிலீசிற்கு ரெடி! சூரரை போற்று அப்டேட்!

காப்பான் பட வெற்றிக்கு பின்னர் தற்போது சூர்யா சூரரை போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி

காப்பான் பட வெற்றிக்கு பின்னர் தற்போது சூர்யா சூரரை போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

unknown node

இப்படமானது, கோவையை சேர்ந்த, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வந்தது. தற்போது இப்பட ஷூட்டிங் இன்று நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார். மேலும், கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.