சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK25’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக “பராசக்தி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் தலைப்பை அறிவிக்கும் வகையில், டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டைட்டில் டீசரை வைத்து பார்க்கும் பொழுது, ஸ்ரீலீலாவும் அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மறுபுறம், சிவகார்த்திகேயனின் பயங்கரமான எதிரியாக ரவி மோகன் நடிப்பதாக தெரிகிறது.
மேலும், டீசர் பழைய மெட்ராஸ் மாணவர் அரசியலைச் சுற்றி வரும் ஒரு திரைப்படத்தை டிரெய்லர் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டமான சிவகார்த்திகேயன் புரட்சிகர கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.
unknown nodeஇந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சி, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்ய, டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
