2012 முதல் 100-ஐ தாண்டியும் இன்னும் சம்பளம் வாங்கவில்லை.! அனிருத்தின் தீராத காதல்.!
3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இதுவரை 25 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்றே கூறலாம். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அனிருத் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசைமைத்து வருகிறார். இசையமைப்பதை தவிர்த்து பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடுவதை அனிருத் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும்போது தான் சம்பளம் வாங்குவதில்லை என்று அனிருத் கூறியுள்ளதாக தக்வல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை 100-க்கு மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.
இது இசை மீதான காதல் என்றே கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- கல்யாணத்துக்கு முன்னாடி அண்ணி செய்த காரியம்.. என்னால் மறக்க முடியாது.! சூர்யா தங்கை கூறிய ரகசிய தகவல்.!
மேலும், பாடல்களை படுவதற்கு அனிருத் சம்பளம் வாங்குவதில்லை என்ற தகவலை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன மனுஷன் யா என புகழ்ந்து பேசி வருகிறார்கள். மேலும் அனிருத் தற்போது ஜவான், ஜெயிலர், இந்தியன் 2, AK62, NTR30, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.