நடிகை ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஷ்சீ திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ரஜினி,அஜீத்,விஜய்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக செய்தி பரவி வந்தது. நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
unknown nodeஇந்நிலையில் தற்போது ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரது திருமண புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரேயா,கடந்த மார்ச் 12ஆம் தேதி ராஜஸ்தான் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
unknown nodeunknown nodehttps://twitter.com/real_hottism/status/975977030784356352