சட்டுன்னு ஷாக் ஆயிடுச்சு…பிட் துணியில் கிக் ஏத்தும் சமந்தா.!

samantha bikini

நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், பிகினி அணிந்திருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது உடலின் தசைகளை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், சமந்தா தனது உடல்நிலையில் கவனம் செலுத்த உள்ளதால், ஒரு வருடத்திற்கு தனது சினிமா சார்ந்த திட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

SAMANTHA HOLIDAYS PIC
SAMANTHA HOLIDAYS PIC [image @Samantha]

READ MORE – ப்பா சான்ஸே இல்ல…சாய் பல்லவியை புகழ்ந்த சமந்தா! வைரலாகும் வீடியோ!

அந்த நோயில் இருந்து தற்போது மெதுவாக மீண்டு வரும் சமந்தா, தனது ரசிகர்களிடையே இந்த பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஹெல்த் போட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கினார்.  அதில் அவர் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி பேசிவருகிறார்.

SAMANTHA HOLIDAYS PIC
SAMANTHA HOLIDAYS PIC [image @Samantha]

READ MORE – Fact check: திருமண கோலத்தில் சமந்தா? மணப்பெண் போட்டோஸ் வைரல்…

இப்படி இருக்கையில், நீண்ட நாட்களுக்கு பின் சொல்லப்போனால், ஒரு வருடத்திற்கும் மேலாக தனதுசமூக வலைத்தளங்களில் எந்தவித புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்து அவர், சமீப கலாமாக தான் மீண்டும் போஸ்டர்களை வெளியிட தொடங்கினார். தற்பொழுது, மலேசிய விடுமுறையில் இருக்கும் சமந்தா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார் என்றே சொல்லலாம்.

SAMANTHA HOLIDAYS PIC 2
SAMANTHA HOLIDAYS PICimage @Samantha]

அதாவது, மலேசியாவின் லங்காவியில் விடுமுறையை அனுபவித்து வரும் சமந்தா, அங்கு தான் தியானம் செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் இயற்கையின் குளத்தில் நீராடுவதையும் காணலாம். இதுவரை இது போன்ற பிகினி உடையில் இது மாதிரியான கவர்ச்சியை வெளிப்படுத்தியதில்லை.

SAMANTHA HOLIDAYS PIC
SAMANTHA HOLIDAYS PIC [image @Samantha]
நீண்ட நாட்கள் கழித்து இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை வைத்து மீண்டும் சமந்தா பார்முக்கு வருகிறார் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் தனது இரண்டாவது தெலுங்கு படமான குஷி திரைபடத்தில் நடித்திருந்தார், இப்பொது இந்திய சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

SAMANTHA HOLIDAYS PIC
SAMANTHA HOLIDAYS PIC [image @Samantha]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்