அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு சமந்தா ஆட உள்ளாராம்.
தெலுங்கு ஸ்டைலிஷ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சுகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
unknown nodeதெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
unknown nodeஇந்த திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா ஆட உள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார் என்கிற செய்தி திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.