படப்பிடிப்பின் போது காயமடைந்த சாஹோ பட நடிகர்!

நடிகர் அருண் விஜய் பிரபலமான இந்திய நடிகராவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில்,

நடிகர் அருண் விஜய் பிரபலமான இந்திய நடிகராவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், தற்போது இவர் அருண் விஜய் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

அருண் விஜய்யின் 30 வது படமான இதில், பலக் லால்வாணி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், மூவிங் சைட்ஸ் இந்த திரைபடத்தை தயாரிக்கிறது.  இந்நிலையில், இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேலையில் இருக்கும் போது அடிபட்டால் நான் அப்போது வலியை உணர்ந்ததில்லை’ என குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

unknown node