வித்யாவால் மனோஜிடம் மாட்டிய ரோகினி..! அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் சிறகடிக்க ஆசை சீரியல்..!
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 4] எபிசோடில் வித்யா கூறிய பொய்யால் மனோஜிற்கு ரோகினி மீது சந்தேகம் வந்தது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 4] எபிசோடில் வித்யா கூறிய பொய்யால் மனோஜிற்கு ரோகினி மீது சந்தேகம் வந்தது.
முத்து மீனாவுக்குள் ஏற்படும் மோதல் ;
முத்து சவாரி போறாரு ..அப்படியே கார்ல வந்தவர் கிட்ட பேச்சும் கொடுக்குறாரு.. அவரும் தான் பொண்ணு பாக்க போறதா சொல்றாரு.. இப்ப முத்து கல்யாணத்த பத்தியும் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க எப்படி நடந்துக்குவாங்க எல்லாமே அவர்கிட்ட சொல்லிட்டு வராரு ..அப்போ மீனாவ பத்தி பேசுறாரு ,என் பொண்டாட்டி என்னை நல்லா பாத்துக்குவா.. ஒரு சில டைம் மகாலட்சுமி மாறி இருப்பா.. ஒரு சில டைம் பேயா மாறிடுவா அப்படின்னு சொல்றாரு. அப்படி சொல்லிக்கிட்டு ஒரு டூவீலரில் இடிச்சிடுறாரு.. அது யாருன்னு பார்த்தா நம்ம மீனாதான்.. ஆனா மீனா யாருன்னு தெரியாம திட்ட ஆரம்பிச்சிடறாங்க. முத்து காரைவிட்டு கீழ இறங்கி வர்றாரு.. மீனா அவரைப் பார்த்தும் பாக்காத மாதிரியே திட்டுறாங்க..
இத பார்த்த போலீஸ் என்ன நடந்துச்சு ஆக்சிடென்ட்டா பைன கட்டுயா.. அப்படின்னு முத்து கிட்ட கேட்க அதுக்கு மீனா அவரு என் புருஷன் நீங்க என்ன மரியாதை இல்லாம பேசுறீங்க அப்படின்னு போலீஸ்கிட்ட சண்டைக்கு போறாங்க.. முத்துவும் சார் இது என் பொண்டாட்டி தான் அப்படின்னு சொல்லவும் போலீஸ் உங்க சண்டை எல்லாம் வீட்ல வச்சுக்கோங்க இப்ப இடத்தை காலி பண்ணுங்கன்னு சொல்லுறாரு .. இப்போ முத்து கார்ல வந்தவரு சார் நீங்க சொன்னிங்களே பேயாட்டம் ஆடுவாங்கன்னு இவங்க தான் உங்க பொண்டாட்டியா அப்படின்னு கேட்குறாரு .. இதை கேட்டுட்டு மீனாவுக்கு கோவம் வந்துடுது. யாரு நான் பேயா அப்படின்னு கேட்டு சண்டைக்கு போறாங்க ..சரி கிளம்புன்னு முத்து மீனாவை அனுப்பி விடுறாரு.ரோகிணி ஹாஸ்பிடல்ல இருக்கிறாங்க.. அங்க உள்ள நர்ஸ் கிட்ட அம்மாவை கூடவே இருந்து பாத்துக்குறது மாதிரி ஆள் வேணும்னு கேக்குறாங்க.
வித்யாவை விசாரிக்கும் மனோஜ் ;
அதுக்கு அந்த நர்ஸ் நானே பார்த்துகிறேன்னு சொல்லிடுறாங்க.. ரோகினையும் ரொம்ப நிம்மதி ஆயிட்டாங்க. இப்ப மனோஜ் கால் பண்றாரு.. என்ன ரோகினி எங்க இருக்க அப்படின்னு விசாரிக்கிறார்.. நான் ஒரு வித்யா கூட இருக்கிறேன் ஒரு அர்ஜெண்ட்னு வர சொல்லி இருந்தா அப்படின்னு சொல்றாங்க.. மத்ததெல்லாம் நான் வீட்ல வந்து சொல்றேன் அப்படின்னு போனை கட் பண்ணிடுறாங்க.இங்க பாத்தா வித்யா ஷோரூம் ல தான் இருக்கிறாங்க.. அதை மனோஜூம் பாத்துட்டாரு.. இப்ப வித்யாவுக்கு ரோகிணி கால் பண்ணி நான் உன் கூட இருக்கிறதா மனோஜ் கிட்ட சொல்லி இருக்கிறேன் நீயும் அதே மெயின்டன் பண்ணு அப்படின்னு சொல்லுறாங்க .. இத கேட்ட வித்யாவுக்கு அதிர்ச்சி ஆயிடுது ந உன் ஷோ ரூம்ல தான் இருக்கேன் மனோஜ் என்னை பார்த்துட்டாரு.. அப்படியா இப்ப உடனே கிளம்பு அங்கிருந்து அப்படின்னு ரோகிணி சொல்றாங்க..
ஆனா வித்தியா பின்னாடியே வந்து எங்க ரோகிணி உன் கூட தான் இருக்கேன் சொன்னா .. என் கூட தான் இருந்தா இப்பதான் ஏதோ அர்ஜென்ட் வேலைன்னு கிளம்பிட்டா.. அப்படின்னு சொல்லவும் மனோஜ் கேக்குறாரு என்ன 10 செகண்ட்லயா அப்படின்னு சந்தேகமா கேக்குறாரு.இல்ல அது வேற வித்யாவா இருக்கும் அப்படின்னு சமாளிக்க முயற்சி பண்றாங்க ஆனா என்ன சொல்றதுன்னு தெரியாம புலம்புறாங்க .. மனோஜூக்கு சந்தேகம் அதிகமாயிடுது.. இப்போ முத்து கட்டிலுக்கு கொசுவலை மாற்றுவதற்காக ஒருத்தரை அனுப்பி விடுறாங்க.. அவர் வீட்டுக்குள் வந்ததும் முதலாளியம்மா முதலாளியம்மா அப்படின்னு கூப்பிடுறாங்க விஜயா வராங்க .. உங்களை இல்லம்மா முதலாளியம்மாவை கூப்பிடுங்க அப்படின்னு சொல்லவும் இப்ப மீனாவும் வராங்க அம்மா ஐயா இந்த கொசு வலையை மாட்டணும்னு சொன்னாங்க.. மீனா காட்டில் இருக்குற இடத்தை காட்டுறாங்க ..
இப்போ வாங்க சுருதி வராங்க .. ஆண்ட்டி என்ன நடக்குது இங்க அப்படியே மீனா கூட சண்டை போடுற மாதிரியே சுருதி பேசுறாங்க.. இதெல்லாம் கேட்டு விஜயா சந்தோஷப்படுறாங்க..ஆனா அவங்க ரெண்டு பேரும் நடிக்கிறது விஜயாவுக்கு தெரியாது.. முத்து வீட்டுக்குள்ள வராரு மீனா செம கோவத்துல இருக்காங்க.. பொண்டாட்டிய பத்தி இப்படித்தான் மத்தவங்க கிட்ட சொல்லுவிங்களா ..என்னை பேயின்னு சொல்லி இருக்கீங்க.. நான் என்ன பேயா அப்படின்னு கேக்குறாங்க கோவமா.. அது இல்ல மீனா அப்படியெல்லாம் சொன்னாதான் சவாரி எல்லாம் கிடைக்கும் அப்பத்தான் பின்னாடியே அல்வாவும் கிடைக்கும்னு சொல்லிகிட்டே அல்வாவை எடுத்து மீனா கிட்ட நீட்டறாரு.. மீனா அல்வாவ வாங்கிட்டு சமாதானம் ஆவாங்களான்னு நாளைக்கு எபிசோடில் பார்க்கலாம்.