இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”.இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த படி வெளியானது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். டிரைலரில் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை , விஜயின் மாஸ் காட்சிகள் என டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. “பிகில்”படத்தில் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் இருப்பது போல தெரிகிறது. பெண்கள் அணியில் ஒருவராக ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா நடித்துள்ளார்.டிரைலரின் ஒரு காட்சியில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கூறுகையில் , “எங்க அப்பா குண்டு , எங்க அம்மாவும் குண்டு பின்ன நான் எப்படி இருப்பேன்” என்ற வசனம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
unknown nodeபிகில் டிரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ சங்கர்..!
— Robo Sankar (@imroboshankar) October 13, 2019