நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ” ஜபாக் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட டெல்லி சார்ந்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்திற்க்காக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை போல் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தீபிகா படுகோன் வெளியிட்டார்.
இந்நிலையில் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் சமீபத்தில் ரன்வீர்சிங் மற்றும் தீபிகா படுகோன் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் ரன்வீர்சிங் தன் மனைவி தீபிகா படுகோன் செருப்பை கையில் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown node