இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் போல வருகிற அனைத்து படங்களும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணு விஷால் – அமலா பால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார்.படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.. இப்படத்தை படலரும் பாராட்டிய நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இப்படத்தை புகழ்ந்துள்ளார். அவர் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு போனில் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். படம் பிரமாதமாக இருந்ததாகவும், போலீஸ் உடை விஷ்னுவிற்கு சரியாக இருந்ததாகவும், வில்லன் மேனரிசம் சூப்பராக இருந்ததாகவும் கூறினார். இதனை விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.source :CINEBAR
DINASUVADU
unknown node