"ஒரு அடார் லவ்" திரைப்படத்தால் வருத்தத்தில் பிரியா வாரியர்!மகிழ்ச்சியில் நூரின்! காரணம் இதுவா

This news gives information about Priya Warrior sad with the movie "A Adar Love" The reason is this- "A Adar Love" thiraipadathal

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் “ஒரு அடார் லவ்”. இப்படம் மலையாளம் உட்பட மூன்று  மொழிகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா வாரியர் ஒரு பாடலில் கண் அடித்தும் புருவத்தை அசைத்தும் காட்சி இடம் பெற்றது.

இக்காட்சி மூலம் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இப்படம் படம்  தோல்வியை தழுவியது.

இதனால் பிரியா வாரியர் நடிப்பை பலரும் கேலி செய்தனர். இப்படத்தில்  இரண்டாவது கதாநாயகியாக  நடித்த நூரின் சிறப்பாக நடித்து உள்ளார் என பாராட்டினர்.

பிரியா வாரியர் கண் அடிக்கும் வீடியோ பிரபலமானதால் தயாரிப்பாளர் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல கதையை மாற்றி விட்டார் என இயக்குனர் ஓமர் லூலு குறை கூறினார்.

பிரியா வாரியருக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நூரினுக்கு நடிக்க  வாய்ப்பு கிடைத்துள்ளது. சேது இயக்கும் சாக்லேட் ரீடோல்ட் படத்தில் உன்னி முகுந்தனுடன் நடிக்கிறார்.

“ஒரு அடார் லவ் “படத்தை பார்த்துபிறகு தான் இந்த வாய்ப்பு தருவதாக இயக்குனர் தெரிவித்தார்.