வேட்டி சட்டையில் அரசியல்வாதியாக 'விஜய்'.. கடைசி படத்தின் பூஜை க்ளிக்ஸ் வைரல்.!

'தளபதி 69' திரைப்படத்தின் பூஜை நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy 69 Poojai stills

சென்னை :இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் படத்திற்கு  தற்காலிகமாக “தளபதி 69” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் – நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகி வந்த நிலையில், இன்று இப்படத்தின் பூஜை நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இப்பொது, பூஜை நிகழ்வில் எடுக்கப்பட்ட நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

இந்த நிகழ்ச்சியில் விஜய், வெள்ளை வேட்டி சட்டை அணிந்து அரசியல்வாதியாக வருகை தந்துள்ளார். இதற்கு முன்னதாக, எந்தவித நிகழ்வுக்கும் விஜய் வேட்டி சட்டை அணிந்ததில்லை,  இதுவே முதல்முறை. இதனிடையே, விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை பூமி பூஜை நாடடைபெற்றது.

unknown node

தனது காட்சியின் மாநாடு பூமி பூஜை நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும், தளபதி 69 விழாவில் கலந்து கொண்டார். இதில் விஜய்யை தவிர, பாபி தியோல், பூஜா ஹெக்டே, இயக்குனர் எச் வினோத், தயாரிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

unknown node

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என முன்பே தகவல் வெளியான நிலையில், நாளைமறுநாள் அக்டோபர் 6ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இது ஒரு அரசியல் படம் என்று கூறப்படுகிறது.