பொன்னியின் செல்வன் படகுழுவிடம் இருந்து அதிகாரபூர்வமாக முதலில் வெளியான பிரமாண்ட அறிவிப்பு!

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் இவரது  கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன்.

மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் தற்போது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் இருந்து முதன் முதலாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் இவரது  கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.

unknown node

இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்பட ஷூட்டிங் தாய்லாந்தில் உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து தற்போது முதல் அதிகாரபூர்வ அப்டேட்டாக அப்படதில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம் & குமரவேல், வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர்.ரகுமான், கலை – தோட்டா தரணி, ஒளிப்பதிவு – ரவி வர்மன் என பல அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் பாடலாரசியர் வைரமுத்து பெயர் இதில் இல்லை. மேலும் வேறு பாடலாசிரியர் பெயரும் இல்லை. 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் இன்னும் பாடலாசிரியர் பெயர் அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.