எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் மாணிக்கவேல் ரீலிஸ் தேதி இதோ

நடிகர் பிரபு தேவாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முகில் இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பொன் மாணிக்கவேல்' இந்தப் படத்தில் ஹீரோவாக பிரபுதேவா

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம்

ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது படக்குழு

நடிகர் பிரபு தேவாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முகில் இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்’ இந்தப் படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்துள்ளார்.ஹீரோயினாகிய நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.படம் தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. இருந்து துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரியான ஜஜி பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது அதன்படி வரும் பிப்ரவரி 21ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரசிகர்களிடையே படத்தின் பெயர் மற்றும் டீசர், ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.