தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் […]
அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை ‘தி ரெட் பலூன்’ படம் திரையிடல். உலக முழுவதும் குழந்தைகளின் பிரியமான விளையாட்டு பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. இந்த சூழலில் கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம் தான் 1956-ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெட் பலூன்’. இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். இந்த படத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் பள்ளி செல்லும்போது […]
தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் மூலமாக பிரபலமானவர் பானு. இவர் தமிழில் தாமிரபரணி என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் கடைசியாக இவர் தமிழில் நடித்திருந்தார். இவர் ஏராளமான மலையாளப்படங்கள் நடித்துள்ளார். மேலும் கேரளாவை சேர்ந்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரிங்கு டோமி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இவர்களுக்கு […]
ஒரே வாரத்தில் முழு படத்தையும் நடிகை ஹன்சிகா நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா தற்போது ‘105 மினிட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜா துஷ்ஷா இயக்கியுள்ளார். இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. […]
சட்டம் கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தான் சட்டம், அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு திருத்த மசோதா நிலைகுழுவிற்கு அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இது குறித்து தனது அறிக்கையை நிலைக்குழு சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த திருத்த சட்டத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்று வந்தாலும், நான்காவதாக இடம் […]
கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் புகைபிடிக்கும் காட்சிகளை நடிக்க மாட்டேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தகுந்த வசூலையும் கொடுத்தது. இந்நிலையில், கார்த்தி பல படங்கள் நடித்திருந்தாலும் மாஸ் காட்டுவதற்காக எடுக்கப்படும் புகை பிடிக்கும் சீன்களை தவிர்த்து வருகிறார். கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் […]
திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கால், திரைப்படம், டிவி சீரியல், கோ – ப்ரொடக்சன் என அனைத்து பட தயாரிப்புகளுமே தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செய்தி – ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா […]
இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அண்மையில் படமாக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒரு பகுதியில் அமலாபாலும் இருப்பார் என கூறப்பட்டதோடு, பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்பு அமலாபால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்கள் அறிவிக்காமல் இருந்தார். தற்போது அதற்கான காரணத்தை அறிவித்துள்ள அமலாபால் இந்த படத்தை நிராகரித்ததற்கான […]
நடிகை த்ரிஷா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன், 15 வருடங்களுக்கு பின் நடிகை த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ‘ஆச்சார்யா’ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா 2006-ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் […]
டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோக சங்க தலைவராக உள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில் டிடிஎஸ் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், திரைப்படங்களுக்கான டிடிஎஸ், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இல்லாமல் தமிழகத்தில் மட்டும்தான் விநியோகஸ்தர்கள் இந்த டிடிஎஸ் கட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இப்படி […]
நடிகை நிகிஷா படேல் தெலுங்கு திரைப்படமான புலி படத்தில் நடித்ததன் மூலம் கதானாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் தலைவன் படத்தில் ஹிரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் கதாப்பாத்திரங்களை விட கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். இந்நிலையில், இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாத காரணத்தால், இவர் தென்னிந்திய சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளாராம். மேலும் இவர் தனது பூர்விக ஊரான லண்டனுக்கே சென்று தங்கவுள்ளாராம்.
நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், […]
பிரபல இயக்குநர் மிஷ்கின், திரைப்படம் ஒன்றின் போஸ்டரை தெருவில் இறங்கி ஓட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 66வது தேசிய விருது வழங்கப்பட்ட பாரம் திரைப்படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி என்ற பெண் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிக சிறந்த படம் என்று தேசிய விருதில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரம் திரைப்படம் 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் புரோமோஷனுக்கு இயக்குனர் மிஸ்கின் இறங்கி வேலை […]
காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தனது கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கும் என அண்மையில் அளித்த பேட்டியில் சமந்தா தெரிவித்தார். கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டார். இதில் விஜய்சேதுபதி நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு 2வது முறைகயாக இவரது படத்தில் நடிக்கிறார். பின்னர் இவருக்கு […]
‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் உலகளவில் அதிகம் பேர் பார்த்த பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மாஸ்டர் இந்தபடத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டிக் கதை’ என்ற தலைப்பிலான பாடலை, காதலர் தினத்தன்று மாலை 5 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது. Now this is special! 9 mil in one day ????????????Booom ???? and number […]
நடிகர் விஜயின் படத்திற்கு தான் குடும்ப ரசிகர்கள் அதிகம் விஜயை ஒப்பிடுகையில் நடிகர் அஜித் மற்றும் ரஜினி அடுத்தடுத்த இடத்தை வகிக்கின்றனர் என்று தயார்ப்பாளர் பளீச் பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாகவும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களாகவும் திகழ்ந்து வருபவர்கள் நடிகர் ரஜினி, நடிகர் விஜய், நடிகர் அஜித்.இந்த மூன்று நடிகர்களின் ரசிகர்கள் இடையே யார் முதலிடம் என்ற ஒற்றை கருத்து வேறுபாடு இன்றளவும் இருந்து கொண்டு தான் வருக்கிறது.இந்நிலையில்தற்போது பிரபல தயாரிப்பாளர் வலம் […]
தமிழில் ட்விட்டுகளை மட்டும் பதிவிட்ட ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று மகிழ்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது […]
நடிகர் தனுஷின் 40 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-தேதி வெளியாகியறது. நடிகர் ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் ஒன்றை இயக்குகிறார் இப்படம் தனுஷின் 40-வது படம் ஆகும். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. எனவே டி40 என்று குறிப்பிட்டே செய்திகள் வெளியாகி வருகின்றன.படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு நடிகர் பிரபு தேவாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முகில் இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்’ இந்தப் படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்துள்ளார்.ஹீரோயினாகிய நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.படம் தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. இருந்து துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரியான ஜஜி பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இசையமைப்பாளர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படம், சமீபத்தில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தைப்பெற்ற விக்கி டோனர் என்ற திரைப்படம், இது […]