அமரன் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு.!

சிறுபான்மை முஸ்லிம்கள் மீது, வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் திரைப்படம் இருப்பதாக SDPI கட்சி கருத்து தெரிவித்தனர்.

Amaran Sivakarthikeyan

சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில்  ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதாவது, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது, வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் திரைப்படம் இருப்பதாக SDPI கட்சி கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில், கஷ்மீர் இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக, திருநெல்வேலியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கமல் ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், தமிழ்நாட்டில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, ராயப்பேட்டை உட்லண்ட்ஸ், விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.