சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது, வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் திரைப்படம் இருப்பதாக SDPI கட்சி கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில், கஷ்மீர் இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக […]
மகாராஷ்டிராவில் வருகின்ற அக்டோபர் 22 முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், அவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றினால், சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் […]
50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்-6ம் தேதி வரை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, […]
திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும், 110 நாட்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் காணப்படுகிறது. இதனை அடுத்து, திரையரங்குகளை […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் இன்று 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த […]
கொரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் திரையரங்குகள் மூடப்பட்டது. பின்னர், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்தது. இதைத்தொடர்ந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா 2-வது பரவ தொடங்கியதும் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், கொங்குநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சில திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க உத்தரவிடுமாறு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமைச்செய்யலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சத்தை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் […]
வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கொரோனா நடத்தை படி, வரும் 10-ம் தேதி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள […]
விஜய் மீது கொண்டுள்ள அளவுக்கதிகமான அன்பினால் மலேசியாவில் உள்ள அவரது ரசிகை ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்து மலேசியாவிலிருந்து தனது குடும்பத்தினர் முழுவதையும் கூட்டி வந்து படம் பார்த்து சென்றுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில […]
திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வருடம் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில் இந்தியாவிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திரையரங்குகள், பள்ளிகல்வித்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய […]
தனக்குஓ.டி.டி தளங்கள் மீது ஈடுபாடு உண்டு என்றும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளங்கள் காப்பாற்றும் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலகமே முடக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான புதிய படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஓ.டி.டி தளத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி […]
களத்தில் சந்திப்போம் திரைப்படம் பிப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம் .இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர, ராதா ரவி, ரோபோ சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் […]
கட்டுப்பாட்டை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுப்பாட்டை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமம் ரத்து […]
10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக,கேரளா முழுவதும் 10 மாதங்களாக, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, திரையரங்குகள் திறப்பு குறித்து தொடர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் […]
மேற்குவங்கம் மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். இன்று நடைபெற்ற 6-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை (கேஐஎஃப்எஃப்) துவக்கி வைத்த பின் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்துள்ளார். திரையரங்குகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் வழக்கமான சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் சரியாக பராமரிக்குமாறும் திரையரங்கு உரிமையாளர்களைக் அறிவுறுத்தியுள்ளார். […]
ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தமிழகத்தில் ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கலுகளுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது. 50% இருக்கைகளுடன் காட்சிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக ஜனவரி 11க்குள் பதில் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100% இருக்ககைகளை அனுமதிப்பது […]
விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மருத்துவக்குழுவினரின் அறிவுரையின் பேரில்தான் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அலுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், 50% சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் 100% […]
தியேட்டரில் 100% அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது மக்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் எனவே 50% அனுமதி மட்டுமே வழங்கலாம் என நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரையிலும் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருவது போல […]
சில சமயங்களில் 50 சதவீதம் என்பது 100 சதவீதத்தை விட சிறந்தது என அரவிந்த்சாமி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, திரையரங்குகள், படப்பிடிப்புகள் என அனைத்துக்குமே தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி படிப்படியாக அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், சினிமா துறையினரின் வாழ்வு முன்னேறுவதற்கும் சில தளர்வுகளை அரசு அறிவித்து […]
மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில், சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், சமீபத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், நேற்று 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு […]