தனுஷுக்கு எகிறும் எதிர்ப்பு? 'லைக்'கால் நயன்தாராவுக்குக் குவியும் ஆதரவு!

நடிகை நயன்தாரா இன்ஸ்டாவில் தனுஷை கண்டித்து எழுதிய பதிவை சக நடிகைகள் அந்த பதிவை லைக் செய்து ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.

Nayanthara supports

சென்னை :நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என அனைத்தையும் அவர் தெரிவித்திருந்தார்.

நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் தர முடியாது என மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தனுஷின் அனுமதிக்காகக் காத்திருந்ததாகவும் நயன்தாரா வேதனையுடன் தற்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படையாக பேசி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது சக சினிமா நடிககைகளான பார்வதி, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நயன்தாரா வெளியிட்ட அந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு லைக் செய்து ஆதரவு அளித்துள்ளனர்.

அதிலும், பார்வதி நயன்தாராவின் அந்த பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார். இவர்கள் அனைவருமே தனுஷுடன் இணைந்து படத்தில் பணி புரிந்தவர்கள். இதனால், சினிமா வட்டாரங்களில் இந்த சம்பவம் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷிற்கு இது போன்ற பிரச்சினைகளை சந்திப்பது இது முதல் முறையல்ல இதற்கு முன்பும் இது போன்ற பல பிரச்சினைகளைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நயன்தாரா இந்த பிரச்சினையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயராகவே இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.