நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில் ஆகும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இந்தபடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
unknown nodeஇந்த நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று இரவு 7.30 மணிக்கு அறிவிப்பு ஓன்று வெளியாகும் என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.இதனால் படத்தின் புதிய அப்டேட்டுக்கு காத்திருந்த தளபதி விஜய் ரசிகர்களுக்கு புதிய விருந்து கிடைத்துள்ளது.