பெண்களை இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி , இளம் தலைமுறைக்கு வழிகாட்டுபவராக இருக்க வேண்டும்.
சமீபத்தில் “கொலையுதிர் காலம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி, நயன்தாராவை பற்றி இழிவாக பேசினார். அதற்கு பல நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும் கண்டனம் தெரிவித்தார்.
தற்போது நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தி.மு.க.வில் கட்சியில் இருந்து ராதாரவியை நீக்கியதற்க்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தன்னை பற்றி இழிவாக பேசிய ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
பெண்களை இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி , இளம் தலைமுறைக்கு வழிகாட்டுபவராக இருக்க வேண்டும்.
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் , பிறர் கவனத்தை ஈர்க்க இப்படி கீழ்த்தனமாக ராதாரவி பேசியுள்ளார் என நயன்தாரா கூறியுள்ளார்.மேலும் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறி உள்ளார்.