சிவகார்த்திகேயன்தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக‘கடைக்குட்டி சிங்கம்’இயக்குனர்பாண்டிராஜ்இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தைசன் பிக்ச்சர்ஸ்தயாரித்துள்ளது.
இப்படம் செப்டம்பர் மாதம் அதாவதுஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில்இமான்இசையமைத்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரிஎன பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு முதலில்எங்க வீட்டு பிள்ளைஎன தலைப்பு பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது இந்த பட தலைப்புநம்ம வீட்டு பிள்ளைஎன அறிவித்து முதல் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.