இளையராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா அவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் செய்துள்ளார். 5 முறை தேசிய விருதையும், பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இளையராஜா அவர்களுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகரும், இயக்குநருமான வெங்கட் […]
சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை குறித்த விசாரணை நேற்று மதுரை ஐகோர்ட் கிளையில் […]
சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதலில் எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு பரிசீலனையில் இருந்த நிலையில், […]
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரம் கடந்து ஆகஸ்ட் 22இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெயம்ரவி நடிப்பில் கோமாளி மற்றும் சமந்தாவின் ஓ பேபி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. […]