ஹிப் ஹாப் ஆதி “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
“நட்பே துணை ” என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து “இன்று நேற்று நாளை” “தனி ஒருவன்” “அரண்மணை 2” “கதகளி” “கத்தி சண்டை” “இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் 2017-ம் ஆண்டு “மீசையை முறுக்கு ” திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி “நட்பே துணை ” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுந்தர்.சி தயாரித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது.
unknown node