சென்னை :நடிகர் ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆரவாரமாக வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஒரு பக்கம், ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மறுபக்கம், படத்தின் வசூலை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளில் தமிழ் படம் ஒன்றின் அதிகபட்ச வசூல் இதுவே. அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.30 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.65 கோடியும், வெளிநாடுகளில் ரூ.75 கோடி வரை வசூலித்திருக்கிறதாம்.
அடுத்த மூன்று நாள்கள் விடுமுறை என்பதால், வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆம், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், சுதந்திர தின விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களால் முதல் நான்கு நாட்களில் ரூ.500 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும், ரூ.1000 கோடி இலக்கை எட்ட வட இந்தியாவில் வலுவான வரவேற்பு தேவை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
unknown node