ரிலீசிற்கு முன்பே விநியோகிஸ்தருக்கு லாபம் கொடுத்த சூர்யாவின் காப்பான்!

சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தி அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம்

சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தி அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட விநியோகிஸ்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் 20 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இப்படம் சென்னை ஏரியாவில் 3 கோடிக்கும், செங்கல்பட்டு ஏரியாவில் 5.50 கோடிக்கும், வட ஆற்காடு பகுதியில் 2.75 கோடிக்கும், சேலத்தில் 2 கோடிக்கும் ( அங்கு இன்னும் விற்பனையாகவில்லை), திருச்சியில் 2.5 கோடிக்கும், திருநெல்வேலியில் 1.25 கோடிக்கும், கோயம்புத்தூரில் 4 கோடிக்கும் ( இன்னும் விற்பனையாக வில்லை ),  மதுரை ஏரியாவில் 3 கோடிக்கும் இப்படம் விறபனையாகியுள்ளதாம். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 24 கோடிக்கு படம் விற்பனையாகியுள்ளதாம். இதன்மூலம் ரிலீசிற்கு முன்பே விநியோகிஸ்தர்களுக்கு படம் லாபத்தை கொடுத்துள்ளதாம்.