அயன், மாற்றான்படங்களை தொடர்ந்து இயக்குனர்கே.வி.ஆனந்த்– நடிகர்சூர்யாகூட்டணி மீண்டும்காப்பான்படம் மூலம் இணைந்து உள்ளது. இந்த படத்தில்மோகன்லால், ஆர்யா, சாயிஷாஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம்செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்திற்கும் தற்போது கதை திருட்டு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது ஜான் சார்லஸ் என்பவர் திரைப்பட சங்கத்தில்சரவெடிஎனும் பெயரில் இந்த கதையை பதிவு செய்து வைத்ததாகவும் அந்த கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியதாகவும் அவர் தற்போது அதை காப்பான் படமாக உருவாக்கி உள்ளதாகவும், புகார் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 4 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என ஒத்திவைத்தார்.
பட ரிலீஸ் சமயத்தில் இந்த மாதிரி பிரச்சினை வருவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆனாலும் தொடர்ந்து சரியாக ரிலீஸ் சமயத்தில் வருவது தயாரிப்பாளருக்கும், அந்த படத்தில் பணியாற்றிய மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சிக்கலை உண்டாக்குகிறது.