#JustNow: பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும், கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடக்கிறது. கிட்டத்தட்ட அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

அதன்படி, சென்னையில் 10 இடங்களும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜயின் பிகில் பட விவகாரத்தில் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தன. கடந்த 2020-ஆம் ஆண்டு அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதுபோன்று, தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கும் நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

#JustNow: பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும், கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு!