இது சும்மா ட்ரைலர் தான்.. இந்திய சினிமாவை மிரட்டிய ‘கங்குவா’.!
சென்னை : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கங்குவா” திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி அதன் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, நிஷாத் யூசுப் எடிட்டராக பணி ஆற்றியுள்ளார்.
சுமார் 10,000 நபர்கள் கொண்ட மிகப்பெரிய போர் காட்சிகளில் ஒன்று கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, அந்த எதிர்பார்ப்பை மேலும் வலுவாக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் இப்போது மிரட்டலான டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர்.
டிரெய்லரில் பிரம்மாண்ட VFX, தேவி ஸ்ரீ பிரசாத் மிரட்டும் பிஜிஎம் காட்சிகள் என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்ட இருக்கிறது. இந்திய சினிமா வியந்து பார்க்கும் அளவுக்கு இதுவரை இல்லாத கிராபிக்ஸ் வேலைகளை படக்குழு பார்த்துள்ளனர்.
மேலும், “அறுபட்ட என் சிரம் மண் உருண்டாலும் உருளும் முன் நெற்றியும், முழங்காலும் மண் தொடா., மண்டியிடா…”, உன் ரத்தமும், என் ரத்தமும் வெவ்வேறா? என்று சூர்யா பேசும் வசனங்களும் புல்லரிக்க வருகிறது.
டிரைலரின் இறுதியில் நடிகர் கார்த்தி வருவது போல் தெரிகிறது. ஆனால், அதனை தெளிவாக காட்டவில்லை, சஸ்பென்சாக வைத்துள்ளனர். இவ்வாறு, சரித்திரம்சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது. கலந்த பேண்டஸி படமாக சுமார் 38 மொழிகளில் மிகவும் மிகவும் பிரமாண்டமாக வெளியாக சரியான படமாக இருப்பதாக டிரைலர் உறுதி செய்யும் வகையில் உள்ளது.