சிறகடிக்க ஆசை சீரியல்- சீதாவிற்கு பார்த்த மாப்பிள்ளை இப்படிப்பட்டவரா.?.
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 21] எபிசோடில் சீதாவிற்கு கண்டிஷன் போடும் மாப்பிள்ளை ..மனோஜ்க்கு ஆர்டர் பிடித்துக் கொடுக்கும் பார்க் ப்ரண்ட்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 21] எபிசோடில் சீதாவிற்கு கண்டிஷன் போடும் மாப்பிள்ளை ..மனோஜ்க்கு ஆர்டர் பிடித்துக் கொடுக்கும் பார்க் ப்ரண்ட்.
முத்து மீனா மாப்பிள்ளையை சந்தித்தனர் ;
ரோகினி சிட்டி கிட்ட அந்த பிஏ ரொம்ப டார்ச்சர் பண்றான் அவனை ஏதாச்சும் பண்ணுங்கன்னு சொல்றாங்க .அதுக்கு சிட்டி எனக்கு அந்த வீடியோ கைக்கு வந்தா தான் பண்ண முடியும் .உடனே ரோகினி தினமும் ட்ரை பண்றேன் மிஸ் ஆயிருது.. எனக்கு ஒரு நாள் டைம் குடுங்கன்னு சொல்றாங்க.. முத்துவும் மீனாவும் சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்கனும்னு அவர காபி ஷாப்க்கு வர சொல்றாங்க ..அவரும் வந்து பேசுறாரு .. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை .எனக்கு வரப்போற வைப் ஷாப்பிங் சினிமாவுக்கு எல்லாம் போகக்கூடாது.. ரெண்டு பேருமே வேலைக்கு போகணும் வீட்டுக்கு எல்லாம் பணம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றாரு. சாரி தான் கட்டணும் அப்படின்னு லிஸ்ட் போட்டு சொல்லிட்டு கிளம்பிட்டாரு .முத்து கிட்ட மீனா என்னங்க சீதாவுக்கு கொஞ்சம் கூட செட் ஆகல .
உடனே முத்து சரி சீதாவே பேசி முடிவு பண்ணட்டும்னு சொல்லுறாரு . மனோஜ் ரோகினி கிட்ட பிசினஸ் ரொம்ப டல்லா போயிட்டு இருக்குது ரோகிணி ஏதாவது டெவலப் பண்ணனும் பேசிட்டு இருக்காரு .அப்போ பார்க் ப்ரண்ட் வராரு. பாஸ் உங்களுக்காக ஒரு ஆர்டர் புடிச்சிட்டு வந்திருக்கிறேன் சொல்றாரு.. ஆனா அந்த ஓனர் சில கண்டிஷன் தான் சொல்லி இருக்கிறார் அவரு ஆர்டர் கொடுக்க போறாவங்க பெரிய பணக்கார குடும்பத்திலிருந்து வந்து இருக்கணும்னு சொல்லி இருக்காரு.. இதைக்கேட்ட மனோஜ் அப்போ எனக்கு எப்படியா கிடைக்கும்னு கேட்க கவலைப்படாதீங்க பாஸ் அதுக்கும் நான் அவர்கிட்ட சில பொயெல்லாம் சொல்லிட்டு வந்திருக்கிறேன்னு சொல்றாரு. இதை கேட்ட மனோஜ் எனது பொய்யா பொய்யெல்லாம் ரோகிணிக்கு பிடிக்காதுன்னு சொல்ல ரோகிணியும் பரவால்ல மனோஜ் பிசினஸ் டெவலப் ஆகணும்னா பொய் எல்லாம் சொல்லி தான் ஆகணும்னு சொல்றாங்க..
மனோஜை வைத்து ரோகிணி போடும் பிளான் ;
அப்படி என்னையா சொல்லி வச்சுருக்கனு மனோஜ் கேக்க அதுக்கு அவரு உன் தம்பி முத்து 50 காரு வச்சு டிராவல்ஸ் நடத்துறாரு ..ரவி சொந்தமாக பெரிய ரெஸ்டாரன்ட் வச்சு நடத்துறாரு அப்படின்னு சொல்லிருக்கேன் . இதைக் கேட்டு மனோஜ் அந்த முத்து இதுக்கெல்லாம் ஒத்துக்குவானா அப்படின்னு கேட்க அதற்கு ரோகிணி சொல்றாங்க நான் சொல்லிக் கொடுக்குற மாதிரி நீ போய் பேசு அப்படின்னு சொல்றாங்க. இப்போ பார்க் ப்ரண்ட் சொல்லுறாரு 4 நாள்ல அவரு இந்தியா வராரு அவருக்கு நீ பார்ட்டி கொடுக்கணும்.. அய்யோ அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகுமே அப்படின்னு மனோஜ் யோசிச்சுட்டு இருக்கிறார் அப்ப ரோகினி சொல்றாங்க நாலு நாள்ல நமக்கு கல்யாண நாள் வருது அதோடு சேர்த்து இதையும் வச்சுக்கலாம் அப்படின்னு சொல்றாங்க இதோட இன்னைக்கு எபிசோட முடுச்சுருக்காங்க .