பிரபல ஹிந்தி நடிகருக்கு மாரடைப்பு…மருத்துவனையில் தீவிர சிகிச்சை.!

பிரபல ஹிந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு (47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோல்மால் தொடர், கிராண்ட் மஸ்தி, ஓம் சாந்தி ஓம் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது இந்திரா காந்தி வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் ‘எமெர்ஜென்சி’ படத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
47 வயதான நடிகர் ஷ்ரேயாஸ் தனது புது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது மனைவி உடனடியாக அவரை அந்தேரி மேற்கில் உள்ள பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், ஐசியூவில் இருக்கும் அவருக்கு நேற்று இரவு ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, நடிகர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகைச் சேர்ந்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வெல்கம் டு தி ஜங்கிள் படப்பிடிப்பின் போது அவர் நன்றாக இருந்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை என்றும், நேற்று கூட ஒரு சிறிய ஆக்ஷன் காட்சிக்காகவும் படமாக்கினார்.
தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!
வெல்கம் டு தி ஜங்கிள் படத்தில் ஷ்ரேயாஸ் தல்படே முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா ராஜ்’ கதாபாத்திரத்திற்கு ஹிந்தி மொழியில் குரல் கொடுத்திருக்கிறாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025