“பிக்பாஸ் சுஜாவுக்கு திருமணம்” பிரபல நடிகரின் பேரனை காதலித்து வருகிறார்..!!
ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து வந்த வேளையில் குற்றம் 23, கிடாரி, பென்சில் உட்பட பல படங்களில் நடித்த நடிகை சுஜா பிக்பாஸ் முதல் சீசனில் வைல் கார்டு என்ட்ரி கொடுத்தவர்.போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். சுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானதுடன் திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது.
இது குறித்து விளக்கம் அளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார். இந்த நிலையில், சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவருக்கும் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் நீண்ட நாள் காதலரான நடிகர் சிவகுமாரை நவம்பர் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சுஜா தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமாகிய சிவாஜி தேவ் தனது பெயரை மாற்றி சிவக்குமார் என படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.